என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் நல பணியாளர்கள்"
- செஞ்சியில் மக்கள் நல பணியாளர்கள், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
- புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
விழுப்புரம்:
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் .சிறுபான்மையினர் நலத் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதியதாக பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் களுடைய பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் .கேசவலு வரவேற்றார் இதில்செஞ்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சிவி ஜயராகவ ன்மேல்மலையனூர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் மற்றும்ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- மயிலம் யூனியன் அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேருவதற்கான விருப்பமனு அளிக்கப்பட்டது,
- விழுப்புரம் மாவட்டத்தில் முன்னதாக பணியில் இருந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணியில் சேருவதற்கான விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.
கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.
- மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.
- அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி:
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் போது மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். மேலும் பல ஆண்டுகளாக போராட்டமும் நடத்தினார்கள்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இதற்கான அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் நலப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர் மறுவாழ்வு சங்கம் சார்பாக அதன் தலைவர் தன்ராஜ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 2011ல் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மற்றும் அதில் இறந்து போன மக்கள் நலப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நடவடிக்கை.
குறிப்பிட்ட இந்த 7500 ரூபாய் தொகையை மட்டுமே ஊதியமாக வழங்குவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மக்கள் நலபணியாளர்களில் பலர் ஓரிரு ஆண்டுகளில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
எனவே ஏற்கனவே முன்னதாக வழங்கப்பட்ட ஊதிய நிர்ணயபடியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடியும் நியாயமான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் புதிய கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறைகால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 7500 ரூபாய் ஊதியம் மட்டுமே என்ற நிர்ணயம் என்பது இத்தனை ஆண்டுகள் மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய சட்ட போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன், தமிழக அரசு ஏற்கனவே கொரோனா காலத்தில் சந்தித்த நிதி பிரச்சினைகளுக்கிடையேயும் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7500 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து அவர்களை மீண்டும் பணியமர்த்த இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது.
எனவே தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்கக்கூடாது, ஏனெனில் ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களில் பலர் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தற்போது வேண்டுமென்றே அரசியலாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அப்போது மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட தங்கள் சங்கத்தில் உள்ளவர்கள் இதுவரை தமிழக அரசின் முடிவை ஏற்கவில்லை. எனவே தமிழக அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.
இதனையடுத்து நீதிபதிகள், உங்கள் சங்க பிரச்சினைகளில் தயவு செய்து அரசியலை கொண்டு வராதீர்கள் என தெரிவித்தனர்.
தமிழக அரசின் முடிவில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பணியினை ஏற்றுக்கொள்ளலாம் என அரசு கூறியிருக்கிறது.
மற்றவர்களுக்கு பிரச்சினை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறியுள்ளது. ஆதலால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. எனவே தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்கப் போவதில்லை.
மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.
அதேவேளையில் அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் புதிய முடிவிற்கு உடன்பட யாவரையும் கட்டாயப்படுத்த கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்